ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே
ஸர்வேஷ்வரன்
சேஷநாதன் திருவடி போற்றி!
ஸர்வ மங்களம் தந்திடும்
சேஷன் திருவடி போற்றி!
சுற்றத்தை சேர்த்து வைத்திடும்
சேஷன் திருவடி போற்றி!
சூன்யம் வைத்தோரை சுழல வைக்கும்
சேஷன் திருவடி போற்றி!
சூக்ஷ்மத்தில் வந்து சூன்யம் நீக்கும்
சேஷன் திருவடி போற்றி!
செய்வினை நீக்கும்
சேஷன் திருவடி போற்றி!
செய்த பாவங்களை போக்கிடும்
சேஷன் திருவடி போற்றி!
அஹங்காரத்தை அழித்திடும்
சேஷன் திருவடி போற்றி!
அன்பினை அளித்திடும்
சேஷன் திருவடி போற்றி!
ஆழ்நிலை தியானத்தில் திளைக்க வைத்திடும்
சேஷன் திருவடி போற்றி!


